சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று பீஸ்ட் படம் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு பீஸ்ட் படம் பார்க்க டிக்கெட்டுடன் விடுமுறையையும்அளித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.