private company has cheated actor Sneha buying Rs 25 lakh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சில முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவரும் சினேகா, தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு கௌரி மினரல் சிமெண்ட்ஏற்றுமதி நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="bf2d39ff-500b-4ebb-b2b0-00ff8b09dcf6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_43.jpg" />

Advertisment

இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், "கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ. 25 லட்சம் முதலீடு செய்துள்ளேன். அந்நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது மாதந்தோறும் ரூ. 1.80 லட்சம் கிடைக்கும் எனக் கூறினார்கள். அதை நம்பி நானும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன். இது தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி மாதந்தோறும்தருவதாக கூறிய பணத்தை அந்நிறுவனம் தராமல் என்னை ஏமாற்றியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரைப் பெற்றுக்கொண்ட கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.