Published on 28/07/2020 | Edited on 28/07/2020

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள், ப்ரித்விராஜ் மற்றும் துல்கர் சல்மான். 'அய்யப்பனும் கோஷியும்' ஹிட்டை தொடர்ந்து ப்ரித்விராஜ் 'ஆடு ஜீவிதம்' எனும் படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் 'குருப்', 'ஹேய் சினாமிகா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் துல்கர் சல்மான் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவருடைய ரசிகர்கள், பிரபலங்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் ப்ரித்விராஜ் சர்ப்ரைஸ் விசிட்டாக துல்கர் வீட்டிற்கு சென்று கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.