Advertisment

"இதை சொன்னால் நாளைக்கு தலைப்பு செய்தியாக மாறிவிடும்" - பிரித்விராஜ் பேச்சு

prithviraj sukumaran talk about mullai periyar

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ் இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, விவேக் ஓபராய், அர்ஜுன் அஷோகன், சித்திக் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வரும் ஜூலை 7 ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisment

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள கடுவா படக்குழு சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதில். இதில் பிரித்விராஜ் கலந்து கொண்டு பல கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர், "சமீபத்தில் முல்லைப் பெரியாறு குறித்து நீங்கள் செய்த ட்வீட்க்கு தமிழ் ரசிகர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருக்கையில் கடுவா படத்திற்கு எப்படி தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நடிகர் பிரித்விராஜ், "ரொம்ப நல்ல கேள்வி, ஆனால் நான் இந்த கேள்விக்கு பதில் சொன்னால், இது மட்டுமே நாளைக்குத் தலைப்பு செய்தியாக மாறிவிடும். நான் இங்க கடுவா படம் குறித்து பேசத்தான் வந்தேன்" என்று கூறி கேள்வியைத் தவிர்த்து விட்டார்.

Advertisment

actor prithiviraj Mullai Periyar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe