கே.ஜி.எஃப் 2 படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நடிகர்!

kgf chapter 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது.

கரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படத்தின் டீசரானது நாளை (08.01.2021) வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல நடிகர் பிரித்விராஜ் கைப்பற்றியுள்ளார். இத்தகவலை அவரது தயாரிப்பு நிறுவனமான பிரித்விராஜ் ப்ரொடக்சன்ஸ், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

kgf 2
இதையும் படியுங்கள்
Subscribe