Advertisment

பிரபாஸ் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

prithviraj starring prabhas salaar film

Advertisment

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எஃப். சேப்டர் 1' படத்திற்கு இந்திய அளவில்கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது.இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வரும் படக்குழு ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும்உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து'கே.ஜி.எஃப். படத்தின்இயக்குநர் பிரசாந்த் நீல் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு, 'ராஜமன்னார்' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரும் பொருட்ச்செலவில் பான் இந்தியாபடமாக உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'சலார்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ராஜ் நடித்து வருகிறார். இதனை 'ராதே ஷ்யாம்' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பிரபாஸ் உறுதி செய்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் 'சலார்' படத்தில் நடித்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

actor prithiviraj salaar prabhas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe