Advertisment

எல்லை மீறிய விமர்சனம்; கடுப்பான பிரித்விராஜ்

Prithviraj refutes his cricticize

Advertisment

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ் தற்போது 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து நடிப்பில் பிசியாக இருக்கும் பிரித்விராஜ், தன்னைப் பற்றி வந்த செய்திக்கு விளக்கமளித்துள்ளார். ஒரு யூட்யூப் சேனலில் "மலையாள திரையுலகில் வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் மத்திய அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன. மலையாளத் திரையுலகைச் சேர்ந்த 5 தயாரிப்பாளர்கள், அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். நடிகரும் ஒரு தயாரிப்பாளரும் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர்" என்று செய்திகள் வெளியானது. மேலும் அந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிரித்விராஜ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த செய்திக்கு தற்போது மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார் பிரித்விராஜ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் பொதுவாக இது போன்ற செய்திகளை தவிர்க்கவே விரும்புகிறேன். ஆனால் இது வரம்பு எல்லையை மீறி இருக்கிறது. அதனால் என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்" என்றார்.

Advertisment

mollywood prithviraj
இதையும் படியுங்கள்
Subscribe