பிரித்விராஜ் பட விவகாரம்; "எங்கள் தலைவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" - விஸ்வ இந்து பரிஷத் விளக்கம்

prithviraj movie issue Vishwa Hindu Parishad organisation explained

பிரித்விராஜ்நடிப்பில் 'கோல்ட்', 'காப்பா' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது 'ஆடு ஜீவிதம்', 'விலயாத் புத்தா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே 'ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பைபுத்தாண்டு தினத்தன்று பிரிதிவிராஜ்தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

மேலும் படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்'எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத்தெரிவித்தார். இப்படத்தை 'இ4 என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்க தீபா பிரதீப் வசனம் எழுதுகிறார். இப்படத்தின்தலைப்புக்கு கேரள மாநில விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் பிரதீஷ் விஸ்வநாத், "குருவாயூரப்பன் பெயரில் எடுக்கவுள்ள இப்படம் அவரைக் கேலி செய்யும் வகையில் இருந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" எனக் கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளம் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் மிரட்டல் விடுத்தபிரதீஷ் விஸ்வநாத், விஸ்வ இந்து பரிஷத்அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுபல ஆண்டுகள் ஆகிறது எனமாநிலத் தலைவர் விஜி தம்பியும், பொதுச் செயலர் ராஜசேகரனும்தெரிவித்துள்ளனர். மேலும், "விஸ்வ இந்து பரிஷத்தலைவர்கள் ஒரு திரைப்படம் உருவாவதற்கு முன்பே தீர்ப்பு வழங்கும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை. படம் வெளியான பிறகு எங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால்நாங்கள் அதை தெளிவுபடுத்துவோம்.எனவே இப்போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. தயவு செய்து இந்த சர்ச்சையில் எங்கள் அமைப்பைத்தேவையில்லாமல் இழுக்காதீர்கள்" எனக் கூறியுள்ளார்.

actor prithiviraj
இதையும் படியுங்கள்
Subscribe