Prithviraj directing suriya for a new biopic movie

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘சூர்யா 42’ எனத் தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவா, சென்னை உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து தற்போது திருவள்ளூர் பகுதியில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு சுதா கொங்கராவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிரிட்டானியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை கதையில் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பல மர்மங்கள் நிறைந்ததாகச் சொல்லப்படும் ராஜன் பிள்ளையின் பயோ பிக் வெப் சீரிஸாக உருவாகவுள்ளது. இதனை பிரபல மலையாள நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் இயக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம்,சூர்யாதனது மனைவி ஜோதிகாவுடன் சென்று பிரித்விராஜ் குடும்பத்தினரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தில் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை மையமாக எடுக்கப்பட்டிருந்தது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.