prithviraj accident in shooting spot

மலையாள நடிகரான பிரித்விராஜ் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும் இந்தியில் அக்‌ஷய் குமார் நடிக்கும் 'படே மியான் சோட் மியான்' (Bade Miyan Chote Miyan) படத்திலும் மலையாளத்தில் 'ஆடு ஜீவிதம்' படத்திலும் நடிக்கிறார். மேலும் விபின் தாஸ் இயக்கத்தில் 'குருவாயூர் அம்பல நடையில்' படத்திலும், இயக்குநராக மோகன்லாலை வைத்து லூசிஃபர் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கவுள்ளார்.

Advertisment

இதனிடையேதற்போது மலையாளத்தில் 'விலயாத் புத்தா' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சந்தனக் கடத்தல் சம்பவத்தை மையமாகக்கொண்டு உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மரையூரில் கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில், நேற்று காலை மரையூர் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பிரித்விராஜ் கீழே விழுந்துள்ளார். அதில் காலில் அடிபட்டுள்ளது. பின்பு அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisment

இதையடுத்து இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர் பூரண குணமடைய வேண்டிஅவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.