Prithviraj in Aadujeevitham trailer released

Advertisment

பிரித்விராஜ் தற்போது மோகன்லாலை வைத்து லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எல்2: எம்புரான் படப்பிடிப்பை இயக்கி வருகிறார். இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முடிந்ததாக அறிவித்திருந்தார்.

இதனிடையே அவர் நடிப்பில் 'விலயாத் புத்தா' படம் உருவாகி வருகிறது. மேலும் விபின் தாஸ் இயக்கும் 'குருவாயூர் அம்பல நடையில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே தேசிய விருது இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கேரளத்திலிருந்து அரேபிய தேசத்திற்கு செல்லும் ஒருவர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாக சேர்கிறார். அவரது வாழ்க்கையை சொல்லும் கதையாக அந்த நாவல் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 6 வருடங்களாக நடைபெற்றது. இடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கேஆர் கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்பு மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு என பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment