prithviactor tweet - blue star

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

Advertisment

இப்படத்தில் நடித்த இயக்குநர், நடிகர் பாண்டியராஜனின் மகனும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனுமான பிரித்விராஜனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடையே பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் தன்னுடைய படத்தை நடிகர் விஜய் சேதுபதி பார்த்து, பாரட்டியதை நெகிழ்ச்சியோடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதாவது “இந்த தம்பிக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் சேர்ந்து “ப்ளூ ஸ்டார்” பார்த்ததற்கு நன்றி அண்ணா.படம் உங்களுக்கு பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் வீடு வந்து என்னையும், எங்களுடைய படக்குழுவையும் பாராட்டியதற்கு நன்றி. “சாம் ஹாப்பி அண்ணாச்சி!!” என்றிருக்கிறார். இதில் சாம் என்பது ப்ளூஸ்டார் படத்தில் வரும் கதாபாத்திரம்; அத்தோடு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்பது விஜய்சேதுபதி பேசி பின்னர் பிரபலமான வசனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment