Advertisment

கார்த்திக்கின் தீவிர ரசிகராக மாறிய நடிகர் ப்ரித்விராஜன்

prithivi

Advertisment

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’ இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி, நடிகர் சிவசேனாதிபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை மாணிக் சத்யா இயக்கியுள்ளார். மேலும் இப்படம் குறித்து அவர் பேசும்போது... “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர். துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம். படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 15 மிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார். சிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக நடித்துள்ளார். மேலும் நட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம். படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது" என்றார்.

kadhal munerra kazhagam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe