Advertisment

'ப்ரின்ஸ்' ரிலீஸ் குறித்து இயக்குநர் வெளியிட்ட புதிய தகவல் 

prince movie release october 21th

Advertisment

சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். தமன்இசையமைக்கும், இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே ப்ரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படக்குழு தற்போது ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் இயக்குநர்அனுதீப் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

actor sivakarthikeyan diwali Prince movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe