prince movie release date Change - Sivakarthikeyan to compete with Karthi again

சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி கார்த்தி நடிக்கும் 'விருமன்' படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் 'ப்ரின்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி 'ப்ரின்ஸ்' படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே கார்த்தி நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார்' படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment