
டான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ப்ரின்ஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் திருக்குறள் புத்தகம் குறித்து கதாநாயகியிடம் விளக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயனின் பின்புறம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.