Advertisment

பிரபல பாடகர் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

prime minister narendra modi condolence to Ghazal singer Pankaj Udhas passed away

பிரபல கஸல் பாடகர் பங்கஜ் உத்வாஸ்பாலிவுட்டில் பல படங்களுக்குப் பாடியுள்ளார். திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது 2006 ஆம் ஆண்டு வழங்கியது. குஜராத்தை சேர்ந்த அவர் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை பெற்றுவந்தார்.

Advertisment

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (26.02.2024) பங்கஜ் உத்வாஸ் (72) இறந்துள்ளார். இவரது மறைவு இசைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி பதிவு பகிர்ந்து வருகின்றன.

Advertisment

அந்த வகையில் பிரதமர் மோடிஅவரது எக்ஸ் பக்கத்தில், “பங்கஜ் உத்வாஸின் இழப்பிற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். அவரது பாடல் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.அவரது கஸல்கள் ஆத்மாவுடன் நேரடியாக பேசுகின்றன. அவர் இந்திய இசையின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார்.அவரின்மெல்லிசை பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டியது. பல ஆண்டுகள் அவருடனான எனது பல்வேறு உரையாடல்களை நினைவுகூர்ந்தேன். அவரது இடம் இசை உலகில் ஒருபோதும் நிரப்ப முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Narendra Modi passed away singer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe