கரோனா பரவாமல் தடுப்பதற்காக உலகெங்கும் பல நாடுகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 21 நாட்கள் லாக்டவுன் போடப்பட்டு 12 நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi_148.jpg)
இதனிடையே திரைத்துறை பிரபலங்கள் கரோனா பரவாமல் தடுப்பதற்காக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி ஆகிய மூவரும் அவரவர் வீட்டில் இருந்தபடியே ஒரே குறும்படத்தில் நடித்து கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
‘ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தில் மேலும் பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.கடந்த 6ஆம் தேதி இரவு வெளியான இந்தக் குறும்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார்.பலரும் இந்தக் குறும்படத்திற்கு வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப் பகிர்ந்து, “உங்களால் விலகியிருக்கவும் முடியும்,உங்களால் இணைந்தும் இருக்க முடியும்.சரியான கருத்துகளை கொண்ட சிறந்த வீடியோ இது.இதைப் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)