/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/462_8.jpg)
பழம்பெரும் நடிகையானசௌகார்ஜானகி தமிழ்மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட தென்னிந்தியமொழிபடங்களில் நடித்து பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.50 வருடங்களுக்கு மேல் திரை துறையில் நடித்து வரும்சௌகார்ஜானகி தற்போது கூட சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரதுகலைச்சேவையைபாராட்டி மத்திய அரசுசமீபத்தில் பத்ம ஸ்ரீ விருதை அறிவித்தது.
இந்நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (28.3.2022) நடைபெற்று வரும் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடிகை சவுகார் ஜானகிக்குபத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க பழம்பெரும் நடிகை சௌகார்ஜானகி பெற்றுக்கொண்டார். இவருடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் எஸ் தாமோதரன், பிரபல தவில் இசைக் கலைஞர் கொங்கம்பட்டு ஏ. வி முருகன், மருத்துவர்வீராசாமி சேஷய்யாஉள்ளிட்டோருக்கும்இவ்விழாவில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)