Premji  Speech at Custody Movie Trailer Launch

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு 'கஸ்டடி' டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்புசென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் ஹீரோ நாக சைதன்யா,ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனிவாசா, இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகரும்இசையமைப்பாளருமான பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

கதையில்லாமல் கூட இயக்குநர் வெங்கட்பிரபு படம் பண்ணுவார்; ஆனால் தம்பி இல்லாமல் படம் பண்ண மாட்டார் என சொல்லப்பட்டு வந்த கிண்டலான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த படத்தில் பிரேம்ஜி இல்லை என்று முடிவெடுத்தாராம் வெங்கட்பிரபு.ஆனால் கடைசி நேரத்தில் சண்டை போட்டு சான்ஸ் வாங்கினாராம் பிரேம்ஜி.

Advertisment

நிகழ்வில் பேசிய பிரேம்ஜி, "தெலுங்கு படம்.அதனால் தெலுங்கு மக்களை வைத்து படம் பண்றோம். நீ இந்தப் படத்தில் இல்லை என்றார். ஆனாலும் நான் இந்தப் படத்தில் நடித்தே ஆவேன் என்று சண்டை போட்டு வாய்ப்பு கேட்டேன். கெஸ்ட் ரோல் என்றால் கூட ஓகே என்று அண்ணனிடம் சண்டை போட்டு வாய்ப்பு வாங்கினேன். ஷூட்டிங் ஜாலியாக சென்றது. படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்" என்றார்.