Advertisment

''நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். ஏன் தெரியுமா..?'' - பிரேம்ஜி 

S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது நடிகரும், இப்படத்தின் இசையமைப்பாளருமான பிரேம்ஜி இப்படம் குறித்து பேசும்போது...

Advertisment

premji

''நான் கேம் ஓவர் என டிசர்ட் அணிந்ததை பார்த்து எனக்கு திருமணம் ஆகப்போகிறது என முடிவு செய்து விட்டனர். இதனால் பல நண்பர்களிடம் இருந்து வாழ்த்துக்களும் வர ஆரம்பித்துவிட்டது. திருமணமானால் வாழ்க்கையின் கேம் ஓவர் என்ற அர்த்தத்தில்தான் நான் அந்த டிஷர்ட்டை அணிந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். அதனால் தான் முரட்டு சிங்கிள் என்று பொறித்த டிஷர்ட்டை தற்போது அணிந்து வந்திருக்கின்றேன். யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல் தான் இந்த படத்திற்கு 'இசை காட்டேரி' என்று வைத்துக் கொண்டேன்'' என்றார்.

zombie premji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe