Advertisment

‘மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்...’ - பிரேம்ஜிக்கு திருமணம்

premji amaran marriage

கோலிவுட்டில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. ஆரம்பகட்டத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின்பு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்தார். கடைசியாக சத்திய சோதனை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இசையமைப்பாளராக வெங்கட் பிரபு - அஷோக் செல்வன் கூட்டனியில் வெளியான மன்மத லீலை படத்தில் பணியாற்றியிருந்தார். இப்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் 45 வயதை எட்டியுள்ள பிரேம்ஜி இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார். இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டன்று, இந்த வருடம் தான் திருமணம் செய்துகொள்வதாகஅவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் மணப்பெண் குறித்து அவர் குறிப்பிடவில்லை. இதையடுத்து 22 வயதாகும் பாடகி வினைதாவைத்தான் பிரேம்ஜி திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

Advertisment

premji amaran marriage

இந்த நிலையில் பிரேம்ஜிக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மணப்பெண் பெயர் இந்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் ஜூன் 9ஆம் தேதி திருத்தனி முருகன் கோயிலில் திருமணம் நடக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

marriage premji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe