கடந்த 2017ஆம் ஆண்டு விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் மற்றும் பல புதுமுக நடிகர்கள் நடிப்பில் உருவான படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் வெளியானது. கிராமப் பின்னணியில் யதார்த்த சினிமாவாக எடுக்கப்பட்டது.

Advertisment

premji amaren

இந்த படத்திற்கு மக்களிடையேவும், விமர்சகர்கள் இடையேவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தனது இரண்டாவது படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் சுரேஷ் சங்கையா. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி காமெடி திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

hero

Advertisment

தற்போது இந்த கதைக்கு நாயகனாக பிரேம்ஜி நடிக்கவுள்ளார். ஸ்வயம் சித்தா, பிக்பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

dabaang

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சரண் ஆர்வி, எடிட்டராக வெங்கட் பணிபுரியவுள்ளனர். சமீர் பரத்ராம் தயாரிக்கவுள்ளார்.