alphonse

குறும்படங்களின் மூலம் பிரபலமடைந்து பின்னர் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அல்போன்ஸ் புத்ரன்.

Advertisment

'நேரம்' என்னும் படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் எடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2015 இல் இவர் இயக்கத்தில் வெளியான 'பிரேமம்' படம் மாபெரும் வெற்றியடைந்தது.

Advertisment

இந்தப் படம் தமிழ்நாட்டில் 250 நாட்களுக்கும் மேலாக திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. இதன்பின் இவர் யாருடன் இணைந்து படம் பண்ண போகிறார் என்று பல எதிர்பார்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து தன்னுடைய மூன்றாவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு 'பாட்டு' என்று பெயரிடப்பட்டிருப்பதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

மேலும், இந்தப் படத்திற்கு அவரே இசையும் அமைப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் மற்ற நடிகர்கள் குறித்தான அறிவிப்புகளும் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.