prem kumar wish to work with mammootty mohanlal

Advertisment

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறி 96 மற்றும் மெய்யழகன் என இரண்டு படங்களை இயக்கி பிரபலமானவர் பிரேம் குமார். இவர் கேரளாவில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அதில் மலையாளம் சினிமா குறித்து பேசினார்.

அப்போது அவரிடம் 96 பட மலையாளத் தழுவலில் யாரை நடிக்க தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மலையாளத்தில் இப்போது அந்த வயதில் பொருத்தமான நடிகர்கள் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் 90களில் இருந்திருந்தால், நான் நிச்சயமாக மோகன்லால் மற்றும் ஷோபனா ஆகியோரை தேர்ந்தெடுத்திருப்பேன். அவர்கள் ஜோடி சிறந்த ஒன்றாக இருந்திருக்கும்” என்றார்.

பின்பு மலையாள நடிகர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றுவது குறித்து பேசிய அவர், “நான் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவரையும் பார்த்து வளர்ந்தேன். அவர்களை வைத்து படம் எடுப்பது எனது லட்சியம். அது என் கனவும் கூட. இந்த தலைமுறை நடிகர்களில் ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான் போன்ற நடிகர்களை எனக்கு பிடிக்கும். அது குறித்து ஒரு பிளானும் இருக்கிறது. விரைவில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்றார்.