preity zinta mother of child by surrogate mother

Advertisment

இயக்குநர்மணிரத்னம் இயக்கிய தில் சே படத்தின் மூலம் சினிமா துறையில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் உயிரே என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து பாலிவுட் சினிமாத்துறையில் முன்னணி கதாநாயகியாக இருந்து வந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனானஅமெரிக்காவை சேர்ந்த ஜூன்குட்எனஃப்என்பவரை திருமணம் செய்துகொண்டார்.அதன் பிறகு படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டு அவர் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="abe68b49-b793-402b-a694-053bfd296401" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_73.jpg" />

Advertisment

இந்நிலையில்நடிகை பிரீத்தி ஜிந்தாவாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகியுள்ளதாகதனது சமூகவலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்," அனைவருக்கும் வணக்கம், உங்கள் அனைவருடன்ஒரு அற்புதமான செய்தியைபகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். ஜெய் ஜிந்தாகுட்எனஃப் மற்றும் கியா ஜிந்தாகுட்எனஃப் ஆகிய இருவரையும் எங்கள் வீட்டிற்கு வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கு உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் வாடகைத்தாய் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.