Advertisment

லத்தியால் அடிக்கப்போகும் பிரபுதேவா... 

prabhudeva

Advertisment

நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிப்பில் ரீஎண்ட்ரி கொடுத்த பிரபுதேவாவிற்கு இரண்டாவது ரவுண்டு திருப்திகரமாகவே உள்ளது. இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான தேவி, குலேபகாவலி, மெர்குரி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளன. மேலும் இவர் நடிப்பில் 'யங் மங் சங்', 'லக்‌ஷ்மி' உள்ளிட்ட படங்கள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கின்ற நிலையில் தற்போது இவர் 'சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து பிரபுதேவா ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகத்தை சல்மான் கானை வைத்து இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படி நடிப்பு, இயக்கம் என இன்னும் பிசியாக இருக்கும் பிரபுதேவா அடுத்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏ.சி.முகில் இயக்கும் இப்படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். மேலும் முதல்முறையாக பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக இதில் நடிக்க இருக்கிறார் என்பதை நேமிசந்த் ஜெபக் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

prabhudeva salmankhan dabangg3
இதையும் படியுங்கள்
Subscribe