prbhas get injured in shooting spot

இந்திய அளவில் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ் கடைசியாக கல்கி 2898 ஏ.டி. படத்தில் நடித்திருந்தார். நாக் அஷ்வின் இயக்கியிருந்த இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை கடந்து சாதனை படைத்தது.

இப்படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி ஜப்பானில் வெளியாகவுள்ளது. இதற்கான புரொமோஷன் செய்யும் பணிகளுக்காக ஜப்பான் பறக்க இருந்தார் பிரபாஸ். ஆனால் தற்போது அவர் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவர் இப்போது நடித்து வரும் படப்பிடிப்பில் கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஜப்பான் போகவில்லை என்றும் மற்ற படி இயக்குநர் நாக் அஷ்வின் உள்ளிட்ட சில படக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபாஸ் தற்போது தி ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து ஸ்பிரிட் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடைக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.