Advertisment

பிரசாந்திற்கு வில்லியாக சிம்ரன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

prashanth

2018ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் ‘அந்தாதூண்’, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த இந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளை வென்றது. இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். நடிகை தபு நடித்திருந்த வில்லி கதாபாத்திரம் இப்படத்தில் வெகுவாகப் பேசப்பட்டது. இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடந்து, படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்கு கடும் போட்டி நிலவியது. இதற்கு மத்தியில், ‘அந்தாதூண்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

Advertisment

தன்னுடைய மகன் பிரசாந்தை நாயகனாக வைத்து இப்படத்தை தியாகராஜன் இயக்கிவருகிறார்.தமிழில் ‘அந்தகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பிரசாந்திற்கு வில்லியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா அலை பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா பாதிப்பின் தாக்கம் குறையத்தொடங்கியதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவரும் யோசனையில் உள்ள படக்குழு, இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

Advertisment

Prashanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe