இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் இயக்கத்தில், பிரஷாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்தகன்’. இப்படம், ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் படமாகும். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட அந்தாதூன் படம் தற்போது தமிழில் அந்தகன் என்ற பெயரில்வெளியாகவுள்ளது.
அந்தகன் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கவிருப்பதாக அறிவித்தபடக்குழு, திடீரென்று இயக்குநரும், பிரஷாந்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்குவதாக அறிவித்தது. இப்படத்தில் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு டிஸ்ரிஃபூசன் செய்கிறார். .
நீண்ட தயாரிப்பில் இருந்த இப்படம், எந்தவித அப்டேட்களும் இல்லாமல், வெறும் பண்டிகை நாட்களில் வாழ்த்து போஸ்டர்களை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டு வந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாக்கியிருந்த இப்படம், பிரஷாந்துக்கு நல்ல கம் பேக் படமாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் பிரசாந்த், தற்போது விஜய் நடிப்பில் உருவாகும், ‘கோட்’ படத்திலும்நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/SM563_YbcuQ.jpg?itok=2FnjuQNc","video_url":"