/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/276_2.jpg)
பிரசாந்த் நீல், 'கே.ஜி. எஃப் 2' படத்தைத் தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை பிரசாந்த் நீல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து 'சலாரின் சகாப்தம் தொடங்குகிறது' என்ற அதிரடியான வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும்படக்குழு பகிர்ந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)