வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் பிரஷாந்த் திடீர் சந்திப்பு

prashanth meets thirumavalavan

பிரஷாந்த், தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்தகன் படத்தை கைவசம் வைத்துள்ளார். நீண்ட காலமாக உருவாகி வரும் படம் விரைவில் வெளியிடவுள்ளதாக சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

சமீப காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அன்மையில் கூட நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

இந்த நிலையில், பிரஷாந்த் தனது தந்தை தியாகராஜனுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி-யை சந்தித்துள்ளார்.

Prashanth Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe