கடந்த வருடம் பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் அந்தாதுன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், சிறந்த ஹிந்தி படத்திற்கான தேசிய விருது வாங்கியது. இதில் நடித்த ஆயுஷ்மான் குரானா சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வாங்கினார். அடாப்ட ஸ்கீரின்பிளேவுக்கும் இந்த படத்திற்குதான் தேசிய விருது கிடைத்தது.

Advertisment

prashanth

மூன்று விருதுகளை பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலில் சித்தார்த் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தால் எப்படி இருக்கும் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். பின்னர், தனுஷ் இந்த படத்தை வாங்கி, அதில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின.

Advertisment

இந்நிலையில், டாப்ஸ்டார் பிரசாந்த் இந்த படத்தை வாங்கியுள்ளதாகவும், தமிழில் ரீமேக் எடுக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த அந்தாதுன் தமிழ் ரீமேக் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

அந்தாதுன் படத்தில் ஹீரோ கண்ணு தெரியாதவர் போல நடிக்க பல சிரமங்களை மேற்கொண்டார். 90 சதவீதம் பார்வையை மறைக்கும் லென்ஸை போட்டுக்கொண்டு நடித்தார் என்று பெறுமையாக பேசப்பட்டது. மேலும் இந்த படத்தின் மேக்கிங் வேறு மாதிரியாக இருக்கும்.

Advertisment

அந்தாதுன் படத்தை ஹிந்தியில் எடுத்த ஸ்ரீராம் ராகவன், ஜானி கடார் என்றொரு படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தைதான் பிரசாந்த் தமிழில் ஜானி என்று ரீமேக் செய்திருந்தார். ஹிந்தியில் விமர்சனம் மற்றும் கமெர்ஷியல் ரீதியாக கொண்டாடப்பட்ட ஜானி கடார் தமிழில் ஜானியாக வெளியானபோது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இப்போது அந்தாதுன் என்றொரு மாபெரும் வெற்றி படத்தை தமிழில் எடுக்க முயற்சிக்கிறார் பிரசாந்த்.