Advertisment

பிரபு தேவாவைத் தொடர்ந்து மற்றொரு நடிகர் - கோட் படக்குழு வாழ்த்து

prashanth birthday poster by goat movie team

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப்பிறகு கேரளாவிற்கு விஜய் சென்றதால் அவருக்கு உற்சாக வரவேற்ப்பு கேரள ரசிகர்கள் கொடுத்தன்ர். படப்பிடிப்பு தளத்திலும் அவரை காணஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது.

Advertisment

prashanth birthday poster by goat movie team

கடந்த 3ஆம் தேதி படத்தில் நடித்து வரும் பிரபு தேவாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்டது படக்குழு. போஸ்டரில் பிரபு தேவாவின் கதாபாத்திர லுக் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கிறது. இதனால் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யாவில் இருக்கின்றனர். இந்த நிலையில் படத்தில் நடித்து வரும் மற்றொரு நடிகரான பிரஷாந்த் இன்று பிறந்தநாள் காண்கிறார். அதனால் அவரை வாழ்த்தியும் அவரது கதாபாத்திர லுக் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

actor vijay The Greatest of All Time venkat prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe