Advertisment

"யோசிச்சி யோசிச்சி..." - வெளியானது பிரசாந்த் படத்தின் பாடல்

Prashanth Andhagan Yosichi Yosichi song release now

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் 'அந்தாதுன்'. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழில்அந்தகன் என்ற பெயரில் பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணியில்படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

ஏற்கனவே வெளியான முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது "யோசிச்சி யோசிச்சி..." என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்துபாடியுள்ளனர். விரைவில் இப்படத்தின் ரீலிஸ்குறித்தஅறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

andhagan Prashanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe