Advertisment

அனிருத், விஜய் சேதுபதி குரலில் விஜய் வெளியிட்டுள்ள பாடல் 

prashanth andhagan first single released by vijay

Advertisment

90 மற்றும் இரண்டாயிரத்தின்தொடக்கத்தில் முன்னணி நடிகராக வளம் வந்த பிரஷாந்த், அதன் பிறகு சறுக்கல்களைச் சந்தித்தார். ஆனாலும் தொடர்ந்து அவ்வப்போது படங்கள் நடித்து வந்தார். அந்த வகையில் தற்போது விஜய்யின் தி கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் அந்தகன். இப்படத்தை பிரஷாந்தின் தந்தை மற்றும் இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார்.

இப்படம், ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்காகும். ‘அந்தகன்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள நிலையில், சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இபப்டத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு வழங்குகிறார்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம், எந்தவித அப்டேட்களும் இல்லாமல், வெறும் பண்டிகை நாட்களில் வாழ்த்து போஸ்டர்களை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டு வந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இதையடுத்து ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. பின்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அந்தகன் ஆந்தம்’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் இப்பாடலை வெளியிட்டுள்ளார். அப்போது உடன் பிரஷாந்த், தியாகராஜன், பிரபுதேவா உள்ளிட்டோர் இருந்தனர். இப்பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடியுள்ளனர். உமா தேவி மற்றும் ஏகாதேசி ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர். பிரபு தேவா நடனமைத்துள்ளார். துள்ளல் பாடலாக அமைந்துள்ள இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

andhagan Prashanth actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe