prashanth about vijay

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரசாந்த் கலந்து கொண்டார். அதில் பொதுமக்களுக்கு இலவசமாகஹெல்மெட் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Advertisment

அவர் பேசுகையில், “தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பார்கள். என்னை பொறுத்தவரை அது உயிரைத் தாண்டி ஒரு குடும்பத்தை காக்கும் கவசம். இன்றைக்கு நடக்கும் நிறைய விபத்துகளில் உயிர் பலியாவது தலைக்கவசம் அணியாதது தான் காரணம் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதனால் மக்களுக்கு தலைக்கவசம் வழங்கி வருகிறேன். அதன் மூலம் ஒருத்தர் உயிர் காப்பாற்றப்பட்டாலும் எனக்கு பெருமைதான்” என்றார்.

Advertisment

அடுத்தடுத்த படங்கள் குறித்துப் பேசிய அவர், “அந்தணன் படம் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸாகும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் சாருடன் சேர்ந்து ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மூன்றுபுது ப்ராஜெக்ட் வந்திருக்கு. அதிலும் நடிக்க போறேன். விஜய்யுடன் நடிக்கும் படம் சூப்பரா போயிட்டு இருக்கு. உங்க எதிர்பார்ப்புக்கு மேல் அந்த படம் இருக்கும்” என்றார்.

மேலும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், “விஜய்யை என்னுடைய சகோதரர் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி உண்மையிலே உழைப்பும், கடமைகளும் நிறைந்தது. அது விஜய் சார்கிட்ட இருக்கு. அதை நான் வாழ்த்துகிறேன். எனக்கு அது ரொம்ப கஷ்டம். அதுக்கு நிறைய தைரியம் வேண்டும். அவர் இறங்கியிருக்கிறார், வாழ்த்துகள்” என்றார்.

Advertisment