ஜெர்மனியில் நடிப்பு, சண்டை மற்றும் டப்பிங் உள்ளிட்டவைகளில் தொழில்முறை பயிற்சி பெற்ற பிரசாத், பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். இப்போது ‘ரத்தமாரே’ படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமாகிறார். ரத்தமாரே குழுவினரை ரஜினிகாந்த் ஆசீர்வதித்தார். “ரஜினி சாரை சந்தித்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. அவரது ஆசீர்வாதங்கள் எனக்கு உலகத்திற்கு நிகரானது,” என்று நடிகர் பிரசாத் கூறினார். இப்படத்தின் தலைப்பை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
பிரசாத், தற்போது பிராட் பிட்டின் நடிப்பு பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வருகிறார். அதே சமயம் ஜெர்மன் மொழி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல வெளிநாடுவாழ் இந்தியர்களைப் போல் இல்லாமல், தனது பாரம்பரியத்துடன் மீண்டும் இணைய இந்தியாவில் குடியேற விரும்புகிறார். ரத்தமாரே படப்பிடிப்பை முடித்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், மற்ற புதுப் படங்களுக்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.