தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

Advertisment

sneha prasana

இதனையடுத்து உடனடியாக பல படங்களில் நடித்தார். ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது.

Advertisment

2009ஆம் ஆண்டு வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்தார் சினேகா. பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து பிரசன்னாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்தார் சினேகா. இந்த படம் அண்மையில்தான் வெளியானது. இந்த படத்தில் நடிக்கும்போது சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. படத்தில் நடித்து முடித்தபின் பிரசவமாக இருக்கும் காரணத்தால் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் தங்களுக்கு மகள் பிறந்திருப்பதாக சமூக வலைதளத்தில், “தை மகள் வந்தாள்” என்று பதிவிட்டு தெரிவித்தார் பிரசன்னா. திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment