Advertisment

"பொன்னியின் செல்வன் பார்த்தபிறகு இதை பாருங்கள்" - ரசிகர்களுக்கு பிரசன்னா வைத்த கோரிக்கை

prasanna talk about mad company web series

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் பிரசன்னா, கனிகா, எஸ். பி. பி சரண், தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய நகைச்சுவை வெப்தொடரான 'மேட் கம்பெனி' இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகர் பிரசன்னா,“ நம்ம வாழ்க்கையில் மிஸ் பண்ற அல்லது மிஸ் பண்ணிட்மோம்னு நினைக்குற ஒரு கேரக்டர் கூட, நடிகர்கள வர வைத்து நடிக்க வைத்தால் எப்படியிருக்கும் என்கிற ‘மேட்’ ஐடியா தான் இந்த ‘மேட் கம்பெனி’யோட அடித்தளம். ஒவ்வொரு எபிசோடும், ஒவ்வொரு ஜானர்ல இருக்கும். அது எல்லாத்தையும் ஜாலியா.. எண்டர்டெனிங்கா.. பண்ணியிருக்கோம். ‘பொன்னியின் செல்வன்’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைப் பார்த்த பிறகு, டைம் கிடைக்கும் போது, ‘ஆஹா’ல இருக்குற, இந்த ‘மேட் கம்பெனி’யோட எட்டு எபிசோடையும் பாருங்க.” என்றார்.

Advertisment

இதனைத்தொடர்ந்துபேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் விஜயக்குமார்,“ இந்த படத்தின் கான்செப்ட் என்னவெனில், நாம் நம்முடைய வாழ்க்கையில் யாரையாவது தவறவிட்டிருப்போம். இது போன்ற ஒருவர் நம்முடைய வாழ்க்கையில் வந்தால் நன்றாகயிருக்குமே.. என பல தருணங்களில் நினைப்போம். அதாவது நம்முடைய வீட்டில் உள்ள பாட்டி புலம்புவதைக் கேட்க ஒரு ஆள் வேண்டும் ...என சில விசயங்களை எளிமையாக நினைத்திருப்போம். அது போன்ற விஷயங்களை நடத்திக் காட்ட ஒரு நிறுவனம் இருந்தால், அது தான் மேட் கம்பெனி. திடீரென்று ஒரு நபருக்கு முன் நின்று, ‘நான் தான் உனது அண்ணன்’ என்றால், அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். நம்பவும் மாட்டார். அதனால் ஏற்படும் நகைச்சுவையான சம்பவங்களை கொண்டது தான் இந்த வெப்தொடர்.

நம்மில் பலரும் பல தருணங்களில், 'ஒரு சின்ன ஸாரியை சொல்லியிருந்தால்... போதும். இந்த நிலை ஏற்பட்டிருக்காது’.. ‘ஒரு போன் செய்திருந்தால் போதும்.. நிலைமை மாறியிருக்குமே..’ என எண்ணுவோம். இதனை மையப்படுத்தித்தான் இந்த ‘மேட் கம்பெனி’ என்ற வலைத்தள தொடர் உருவாகியிருக்கிறது. இந்த தொடர் எட்டு அத்தியாயங்களாக ‘ஆஹா’வில் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசித்து, ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ponniyin selvan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe