Skip to main content

"பொன்னியின் செல்வன் பார்த்தபிறகு இதை பாருங்கள்" - ரசிகர்களுக்கு பிரசன்னா வைத்த கோரிக்கை

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

prasanna talk about mad company web series

 

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் பிரசன்னா, கனிகா, எஸ். பி. பி சரண், தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகி  இருக்கும் புதிய நகைச்சுவை வெப் தொடரான 'மேட் கம்பெனி' இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

 

இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகர் பிரசன்னா,“ நம்ம வாழ்க்கையில்  மிஸ் பண்ற அல்லது மிஸ் பண்ணிட்மோம்னு நினைக்குற ஒரு கேரக்டர் கூட, நடிகர்கள வர வைத்து நடிக்க வைத்தால் எப்படியிருக்கும் என்கிற ‘மேட்’ ஐடியா தான் இந்த ‘மேட் கம்பெனி’யோட அடித்தளம். ஒவ்வொரு எபிசோடும், ஒவ்வொரு ஜானர்ல இருக்கும். அது எல்லாத்தையும் ஜாலியா.. எண்டர்டெனிங்கா.. பண்ணியிருக்கோம்.  ‘பொன்னியின் செல்வன்’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைப் பார்த்த பிறகு, டைம் கிடைக்கும் போது, ‘ஆஹா’ல இருக்குற, இந்த ‘மேட் கம்பெனி’யோட எட்டு எபிசோடையும் பாருங்க.” என்றார்.

 

இதனைத்தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் விஜயக்குமார்,“ இந்த படத்தின் கான்செப்ட் என்னவெனில், நாம் நம்முடைய வாழ்க்கையில் யாரையாவது தவறவிட்டிருப்போம். இது போன்ற ஒருவர் நம்முடைய வாழ்க்கையில் வந்தால் நன்றாகயிருக்குமே.. என பல தருணங்களில் நினைப்போம். அதாவது நம்முடைய வீட்டில் உள்ள பாட்டி புலம்புவதைக் கேட்க ஒரு ஆள் வேண்டும் ...என சில விசயங்களை எளிமையாக நினைத்திருப்போம். அது போன்ற விஷயங்களை நடத்திக் காட்ட ஒரு நிறுவனம் இருந்தால், அது தான் மேட் கம்பெனி. திடீரென்று ஒரு நபருக்கு முன் நின்று, ‘நான் தான் உனது அண்ணன்’ என்றால், அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். நம்பவும் மாட்டார். அதனால் ஏற்படும் நகைச்சுவையான சம்பவங்களை கொண்டது தான் இந்த வெப் தொடர்.

 

நம்மில் பலரும் பல தருணங்களில், 'ஒரு சின்ன ஸாரியை சொல்லியிருந்தால்... போதும். இந்த நிலை ஏற்பட்டிருக்காது’.. ‘ஒரு போன் செய்திருந்தால் போதும்.. நிலைமை மாறியிருக்குமே..’ என எண்ணுவோம்.  இதனை மையப்படுத்தித்தான் இந்த ‘மேட் கம்பெனி’ என்ற வலைத்தள தொடர் உருவாகியிருக்கிறது. இந்த தொடர் எட்டு அத்தியாயங்களாக ‘ஆஹா’வில் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசித்து, ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“போயிட்டு வாப்பு...” - மாரிமுத்துவிற்கு பிரசன்னா அஞ்சலி!

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Actor Prasanna  pays tribute to actor Marimuthu

 

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகப் பல்வேறு படங்களில் நடித்தவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் வில்லன் நடிகரோடு துணையாக வலம் வருவார். சின்னத்திரையில் வெளியாகும் சீரியல் ஒன்றில் குணசேகரன் என்ற கதாபாத்திரம் மூலம் பட்டி தொட்டியெங்கும் இவர் சென்றடைந்தார். அதுவும் குறிப்பாக “இந்தாம்மா... ஏய்...” என இவர் சீரியலில் பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறது.

 

இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Actor Prasanna  pays tribute to actor Marimuthu

 

இந்நிலையில் நடிகர் பிரசன்னா, நடிகர் மாரிமுத்துவிற்கு  தன்னுடைய  எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அஞ்சலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இயக்குநர் மாரிமுத்துவின் மறைவு அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கண்ணும் கண்ணும், புலிவால் இணைந்து பணியாற்றினோம். எங்களுக்குள் சகோதரர்கள் போன்ற ஒரு பந்தம் இருந்தது. பலவற்றில் கருத்து வேறுபாடுகளை ஒப்புக்கொண்டோம். அவரது வாழ்க்கை எளிதானது அல்ல. ஆனால், ஒரு நடிகராக அவர் இறுதியாக நன்றாகத்தான் இருந்தார். அவர் இன்னும் சிறிது காலம் அங்கேயே அப்படியே இருந்திருக்க வேண்டும். வருத்தம். போயிட்டு வாப்பு... ” என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Next Story

பொன்னியின் செல்வன்; இயக்குநர் மணிரத்னத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Ponniyin Selvan Case against director Mani Ratnam has dismissed

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் மனு கொடுத்திருந்தார். அந்த புகார் மனுவில், "வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போல பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோழ பேரரசில் முக்கிய அங்கம் வகித்த வந்தியத்தேவன் குறித்து தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில் தவறான எண்ண அலைகளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதி ராஜா மற்றும் பரதன் சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரரிடம், “பொன்னியின் செல்வன் நாவலைப் படித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர், “நாவலைப் படிக்கவில்லை” எனப் பதிலளித்துள்ளார். “நாவலைப் படிக்காத நிலையில் எப்படி வரலாற்றைத் திரித்துள்ளதாகக் கூறமுடியும்” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இப்படம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றைத் தழுவி எடுக்கப்படவில்லை” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.