prasanna starring new web series

Advertisment

இயக்குநரும் தயாரிப்பாளருமான பாலாஜி மோகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விக்னேஷ் விஜயகுமார் இயக்கும் இணையதொடரில் நடிகர்பிரசன்னா நடித்து வருகிறார். இத்தொடரில் இவருக்குஜோடியாக தன்யாபாலகிருஷ்ணா நடித்துவருகிறார். எஸ்.பி.பி சரண், கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் இத்தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்து வருகின்றனர்.கிரியேட்டிவ் ப்ரொடியூசராகபாலாஜி மோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரைத் தயாரிக்கிறார்.

காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இத்தொடரின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இன்னும் பெயரிடப்படாத இத்தொடரின் படப்பிடிப்பைப் பிப்ரவரி மாத இறுதியில் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.