இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

Advertisment

hrh

இதனால் சினிமா தொழிலாளர்களும் வேலை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் திரையுலகினர் பலர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வரும் நிலையில் நடிகர் பிரசன்னா அஜித், விஜய்யுடன் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில்...''அஜித்தை எனக்கு நிறையப் பிடித்தாலும் அதே அளவு அவருக்கு வில்லனாகவும் நடிக்க விருப்பம். அதேபோல் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்தத் திகைப்பு வானளவு இருக்கும்'' எனக் கூறியுள்ளார்.