காலா படத்திற்குப் பிறகு பிர்சா முண்டா என்ற வரலாற்று படத்தை எடுக்க இயக்குனர் பா.ரஞ்சித் திட்டமிட்டிருந்தார். ஹிந்தியில் பெரும் பொருட்செலவில் உருவாகுவதாக இருந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளிவந்தன. பின்னர், இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Advertisment

pa.ranjith

இதனால் இந்த படத்திற்கு முன்பாக, தமிழில் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் பா.ரஞ்சித். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதையை பல முன்னணி நடிகர்களுக்கு கூறியிருக்கிறார். ஆனால், இறுதியாக அப்படத்தில் நடிப்பதற்கு ஆர்யா சம்மதம் தெரிவித்துள்ளார்.

alt="super duper" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8c40e97f-4710-4c0c-94fc-6e954460eb07" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/super%20duper.png" />

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்த படத்தில் தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சல்பேட்டா என்று பா.ரஞ்சித் பெயரிட்டுள்ளதாக சொல்கிறது. இந்த படத்துக்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார் பா.இரஞ்சித். 'குரங்கு பொம்மை' படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் புதிய கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.