Advertisment

படமாகும் பிரனவ் ஆணவக்கொலை சம்பவம்!

rgv

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மாருதி ராவ் என்பவருடைய மகள் அம்ருதாவும் காதலித்து வந்தனர். பிரனய் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு மாருதி ராவ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதை மீறி இருவரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

Advertisment

இதன்பின் பலமுறை இவர்களை எச்சரித்து வந்த மாருதி ராவ், அம்ருதா கர்ப்பமாக இருக்கிறார்என்ற செய்தி அறிந்து பிரனவைக் கொல்ல கூலிப்படையை அனுப்பி கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று தந்தையர் தினம உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இயக்குனர் ராம்கோபால் வர்மா புது படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 'மர்டர் லவ் ஸ்டோரி' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் கரு, இந்தத் தெலங்கானா ஆணவக்கொலை சம்பவம்தான் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராம்கோபால் வர்மா ட்விட்டரில் கூறுகையில், "இது இதயத்தைப் பிழியும் ஒரு கதையாக இருக்கப்போகிறது. இது அம்ருதா மற்றும் மாருதி ராவ் கதையை அடிப்படையாகக் கொண்டது. தந்தை தன் மகளை அதிகமாக நேசிப்பதன் அபாயங்களைப் பற்றியது. தந்தையர் தினத்தன்று படத்தின் போஸ்டரை வெளியிடுகிறோம்" என்றார்.

daughter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe