Advertisment

முறையற்ற உறவு; தேசிய விருது வென்ற நடிகையை விரட்டி விரட்டி அடித்த நடிகரின் மனைவி

Prakruti Mishra assaulted by costar babhushaan wife

Advertisment

ஒடிசா மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரக்ருதி மிஸ்ரா. இவர்பாபுஷான்மொஹந்திஎன்பவருடன் இணைந்து பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். அண்மையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு சென்னை செல்ல திட்டமிட்டிருந்தனர். அதற்காக புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு நடிகை பிரக்ருதி மிஸ்ராவும், நடிகர் பாபுஷான்மொஹந்திஇருவரும் ஒன்றாக இணைந்து காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது திடீரென காரை வழி மறைத்தநடிகர் பாபுஷான் மனைவியான திருப்தி மொஹந்திநடிகர், நடிகை இருவரையும் பலமாக தாக்கியுள்ளார். இதனால்காரில் இருந்து இறங்கி ஓடிய நடிகையைசாலையில் ஓட ஓடவிட்டு பாபுஷானின்மனைவிஅடித்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து தப்பித்த நடிகை பிரக்ருதி மிஸ்ரா ஆட்டோ ரிக்ஷாவில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் தங்கள் செல்போனில்படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை பிறகு இந்த வீடியோ இணையத்தில்வைரலானது. இதையடுத்து நடிகை பிரக்ருதி மிஸ்ராவின் தாய் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="137628fc-3c12-4f25-83dd-8719f6420d0a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad.jpg" />

Advertisment

இந்நிலையில் இவரைத்தொடர்ந்து நடிகர் பாபுஷானின் மனைவி திருப்தி மொஹந்தி,தன்னுடைய கணவரைபிளாக்மெயில் செய்து நடிகை பிரக்ருதி மிஸ்ரா அவருடன் வாழ நிர்ப்பந்தித்து வருவதாகவும், அவர் எங்கள் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு எங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருந்தது என்றும், அவர் வந்ததால்தற்போது நிம்மதிஇழந்து தவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த கோபத்தில் தான் நான் இப்படி நடந்து கொண்டதாகவும், எனக்கும் என் பிள்ளையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பிரக்ருதி மிஸ்ரா கடந்த ஆண்டு ஹலோ அர்சிஎன்ற படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்ததுகுறிப்பிடத்தக்கது.

#ODISHA Actress national award
இதையும் படியுங்கள்
Subscribe