Prakash Raj

Advertisment

நடிகர் பிரகாஷ் ராஜ், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துவருகிறார். இவர், கடந்த 9ஆம் தேதி தன்னுடைய வீட்டில் கால் சறுக்கி கீழே விழுந்தார். அதில், அவருக்குத் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 10ஆம் தேதி ஹைதராபாத் விரைந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இந்த நிலையில், தனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, பிரகாஷ் ராஜ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.