Advertisment

"பிரதமர் மோடி நாட்டை விற்பதை நம்ப மறுக்கிறார்கள் ..." - பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்

prakash raj tweet about pm modi

Advertisment

திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைவைத்துள்ளார். இவர்நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். அவ்வப்போது அரசியல் குறித்துகருத்து தெரிவித்து வரும் பிரகாஷ் ராஜ் மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும்கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

அந்த வகையில்நடிகர் பிரகாஷ் தற்போது மோடி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடி டீ விற்றதைநம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக்கொண்டிருப்பதைநம்ப மறுக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பொதுத்துறைநிறுவனங்களைமோடி தலைமையிலான அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக பலரும் கருத்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது பிரகாஷ் ராஜும் கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.

actor prakash raj india pm narendra modi
இதையும் படியுங்கள்
Subscribe