கேரளாவில் ஆண்டுதோறும் மாநில திரைப்பட விருதுகள் 1969ஆம் அண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக 54வது திரைப்பட விழா வழங்கப்பட்டது. இதில் 2023ஆம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக பிரித்விராஜ் - பிளெஸ்ஸி கூட்டணியில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ படம் 9 விருதுகள் வென்று சாதனை படைத்தது. 

Advertisment

இந்த நிலையில் 56வது திரைப்பட விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. இதில் 2024ஆம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட படங்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதில் நடுவர் குழு தலைவராக பிரகாஷ் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுக்கான படங்களின் திரையிடல் இன்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 128 படங்கள் பட்டியலில் இருக்கிறது. இவை அனைத்தும் இரண்டு முதன்மை நடுவர் குழுக்களால் பார்க்கப்பட்டு அதில் தேர்வாகும் படங்கள் இறுதி நடுவர் குழுக்கு அனுப்பப்படும். 

Advertisment

இரண்டு முதன்மை நடுவர் குழுக்களில் ரஞ்சன் பிரமோத் மற்றும் ஜிபு ஜேக்கப் ஆகியோர் இருக்கின்றனர். இறுதி நடுவர் குழுவில் இயக்குநர் ரஞ்சன் பிரமோத், இயக்குநர் ஜிபு ஜேக்கப், நடிகை பாக்யலட்சுமி, பாடகி காயத்ரி அசோகன், நிதின் லூகாஸ் மற்றும் ரைட்டர் சந்தோஷ் ஏச்சிக்கானம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு விழாவில் நடுவர் குழு தலைவராக இயக்குநர் சுதிர் மிஷ்ரா இருந்தார். இதற்கு முன்பாக தமிழ் திரைபிரபலங்களும் நடுவர் குழு தலைவராக இருந்துள்ளனர். அவர்கள் பாலுமகேந்திரா, பாக்கியராஜ், பாரதிராஜா, சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் ஆவர். இவர்கள் அம்மாநில அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்தாண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரகாஷ் ராஜ், தனது பொறுப்பு குறித்து பேசுகையில், இந்த பொறுப்பால் பெருமை அடைகிறேன் என்றும் எங்கள் குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் சினிமாவைக் கொண்டாட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisment