2024 நாடாளுமன்றத் தேர்தல் முதல் பல்வேறு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் மிகப் பெரிய அளவில் வாக்கு மோசடி செய்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி நேற்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். ஆராய்ச்சி செய்து இதை கண்டுபிடித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் ஆவணக் குறிப்புகளை வெளியிட்டிருந்தார். 

2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள் என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார். 

ராகுல் காந்தி வெளியிட்ட ஆதாரங்களில், பெங்களூருவில் முனி ரெட்டி கார்டன் என்ற பகுதியில், எண்; 35 கொண்ட முகவரியில் உள்ள ஒரு வீட்டில் கிட்டத்தட்ட 80 வாக்காளர்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக கூறினார். இதையடுத்து அங்கு பிரபல ஆங்கில ஊடகம் நேரடியக சென்று ஆய்வு செய்தது. அப்போது, அந்த வீடு 10-15 சதுர அடி பரப்பளவில்தான் இருந்ததும் வீட்டில் வசிக்கும் மேற்கு வங்க நபரான திபாங்கர் என்பவருக்கு அப்பகுதியில் வாக்காளர் அட்டையே இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் ஒரு மாதம் முன்னாடி தான் அவர் அந்த வீட்டில் குடியேறியுள்ளார் என்பதும் அந்த வீடு பாஜக-வில் இருக்கும் ஜெயராம் ரெட்டி என்பவருக்கு சொந்தமானது என்றும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை அனைத்தும் அந்த மேற்கு வங்க நபர் அந்த ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியாக கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், ஆங்கில ஊடகம் ஆய்வு செய்த காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment